Homeசெய்திகள்சினிமாபல மைல்கல்லை அடைய வாழ்த்துகள்... விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய த்ரிஷா...

பல மைல்கல்லை அடைய வாழ்த்துகள்… விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய த்ரிஷா…

-

- Advertisement -
 
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது 50-வது பிறந்தநாளை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினார். நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறினர். இந்நிலையில், முன்னணி நடிகையும், விஜய்யின் தோழியுமான த்ரிஷா, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுமார் 23 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. அன்று முதல் இன்று வரை ஹீரோயின் என்ற ஒரு கதாபாத்திரத்தை மட்டும் தன்வசப்படுத்தி, டாப் நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். இவர் கோலிவுட் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து விட்டார். அதன்படி, விஜய்யுடன் மட்டும் 5 படங்களில் நடித்திருக்கிறார்.
கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி இறுதியாக லியோ திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். நீண்ட இடைவௌிக்கு பிறகு லியோ படத்தில் இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடித்தது. இந்நிலையில், நடிகை த்ரிஷா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

MUST READ