Homeசெய்திகள்இந்தியாராகுல் காந்தியின் ராஜினாமா கடிதம் ஏற்பு!

ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதம் ஏற்பு!

-

- Advertisement -

"பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது"-ராகுல்காந்தி நம்பிக்கை!

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது.

கேரள மாநில வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு தொகுதியில் மட்டுமே எம்.பி. ஆக நீடிக்க முடியும். இதனையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன அறிவித்தார்.

ராகுல் காந்தி

இதனையடுத்து ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை மக்களவையில் சமர்ப்பித்தார். இந்த நிலையில், ராகுல் காந்தியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக ராகுல் காந்தி இனிமேல் ரேபரேலி தொகுதி எம்பியாக தொடர்வார்.

MUST READ