Homeசெய்திகள்சினிமாபிருத்விராஜின் கலகலப்பான குருவாயூர் அம்பலநடையில்... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு...

பிருத்விராஜின் கலகலப்பான குருவாயூர் அம்பலநடையில்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

-

- Advertisement -
kadalkanni
  
மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் பிருத்விராஜ் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் அண்மைக் காலமாக வில்லன் வேடத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்பிற்கு வரவேற்பும் கிடைத்தது. இதற்காக மலையாளத்தில் அவர் ஹீரோவாக வாங்கக்கூடிய தொகையை விட மிகப்பெரிய தொகை சலார் படத்தில் அவருக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்து மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியாான திரைப்படம் குருவாயூர் அம்பலநடையில். சின்ன பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். படத்தில் பிரபல மோலிவுட் இயக்குநர் பேசில் ஜோஸப் நாயகனாக நடிக்க, நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அங்கித் மேனன் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். கலகலப்பான நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தின் ஓடிடி குறித்த அறிவிப்பு வௌியாகி உள்ளது. அதன்படி வரும் ஜூன் 27-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ