Homeசெய்திகள்தமிழ்நாடுஇருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி

இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி

-

- Advertisement -

இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி

திருவொற்றியூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த ரயில்வே ஊழியர் புஷ்பராஜ். இவர் மாட்டு மந்தை மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்துள்ளார்.

சென்னை திருவொற்றியூர் கே.சி.பி.ரோடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ் (36) பெரம்பூர் கேரேஜ் சீனியர் டெக்னீஷியன் ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் பலி

இந்நிலையில் டியோ இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்தின் மீது அதி வேகமாக சென்று கொண்டு இருந்தார். அப்போது நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்ததில் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து புஷ்பராஜை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் புஷ்பராஜ் உடலை பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை (apcnewstamil.com)

இச்சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவுசெய்து புஷ்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ