Homeசெய்திகள்சினிமாஅக்‌ஷய் குமாரின் சர்ஃபிரா... முதல் பாடல் ரிலீஸ்...

அக்‌ஷய் குமாரின் சர்ஃபிரா… முதல் பாடல் ரிலீஸ்…

-

- Advertisement -
அக்‌ஷய் குமார் நடித்துள்ள சர்ஃபிரா படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். கொரோனா காரணமாக இத்திரைப்படம் திரையரங்குகளில் இல்லாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவானது. 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்தார்

படத்தில் ஊர்வசி, கருணாஸ், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சிறந்த இயக்குநர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த நடிகை, சிறந்த இசை அமைப்பாளர் என பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இத்திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படுவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பும் தொடங்கியது.
இத்திரைப்படத்தையும் சுதா கொங்கரா இயக்கி இருக்கிறார். அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்க, ராதா மதன் நாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா இப்படத்தை தயாரித்து உள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். சர்ஃபிரா என்ற பெயரில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வௌியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்திலிருந்து முதல் பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

MUST READ