லெஜெண்ட் சரவணன் ஆரம்பத்தில் தனது தொழில் ரீதியான விளம்பர தொடர்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும் படமானது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. மேலும் லெஜெண்ட் சரவணன் பலரால் உருவ கேலி செய்யப்பட்டார். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்ததாக வெற்றி படத்தை எப்படியாவது கொடுக்க வேண்டும் என்ற அமைப்பில் லெஜென் சரவணன் புதிய லுக்கில் களமிறங்கியுள்ளார். அதாவது லெஜெண்ட் சரவணனின் அடுத்த படத்தை காக்கிச்சட்டை, கருடன் உள்ளிட்ட படங்களின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இயக்குனர் துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயன், சூரி போன்றோரை தனது படங்களில் ஆக்சன் ஹீரோவாக காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். எனவே அதைப்போல லெஜண்ட் சரவணனையும் புதிய பரிமாணத்தில் காட்டுவார் என்று நம்பப்படுகிறது. லெஜெண்ட் சரவணன் 2வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (ஜூன் 24) தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் துரை செந்தில்குமார் சமீபத்தில் நடந்த பேட்டியில் இந்த படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து உள்ளார். அவர் கூறியதாவது, “லெஜெண்ட் சரவணன் அடுத்த படமான இந்த படம் திரில்லர் படமாகும். கருடன் படத்தை முடித்த பின்னர் அவரிடம் கதையை சொன்னேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கருடன், மகாராஜா படத்தின் வெற்றி என்பது ஹீரோவை விட திரைக்கதை தான் முக்கியம் என்பதை காட்டுகிறது. நான் ஸ்கிரிப்ட் எழுதும்போது நடிகர்களுக்கான உயரத்தை எண்ணி எழுதுகிறேன். அது நன்றாக வேலை செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -