மது பாட்டில்களை பிடித்து கள்ள சந்தையில் விற்பனை செய்த திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு மூன்று காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
திண்டிவனம் மதுவிலக்கு பிரிவில் பெரும்பாக்கம் என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன்பு வாகன தணிக்கை நடைபெற்றது. அந்த சோதணையின் போது இரு சக்கர வாகனத்தில் மது பாட்டில் எடுத்து வந்த மூன்று இளைஞர்களை பிடித்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்- 29 பேர் போட்டி (apcnewstamil.com)
அப்போது வழக்கு எதும் பதியாமல் அவர்களிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களையும் ரூபாய் 5 ஆயிரம் பணத்தையும் வாங்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு தெரியாமல் அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தெரியவந்த தகவல் அடிப்படையில் திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு போலீசார் முருகானந்தம், மகேஷ், தினகர் ஆகிய மூவரையும் விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாஜ் உத்தரவிட்டுள்ளார்.