அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது போஸ்டர் என்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் எச் வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். அதேசமயம் நடிகர் அஜித், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரெடின் கிங்ஸ்லி, சுனில் போன்றோர் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார்.
Today 6. 40 , GBU 2
— Suresh Chandra (@SureshChandraa) June 27, 2024
இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அது மட்டும் இல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு 2025 பொங்கல் தினத்தை குறிவைத்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6.40 மணி அளவில் வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இது தொடர்பாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.