Homeசெய்திகள்க்ரைம்லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது

லாட்டரி விற்பனையில் பாஜக நிர்வாகி கைது

-

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை எம்ஜிஆர் நகரில் ஆன்லைன் மூலம் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சூளை பள்ளத்தில் வசிக்கும் விருகம்பாக்கம் பாஜக மண்டல் செயலாளர் விஜயகுமார் என்கிற குள்ள விஜி(30) என்பவர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/cm-mk-stalin-anouncements/96074

அதனையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர் மீது லாட்டரி விற்பனை உள்பட மூன்று வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு உடந்தையாக இருந்த 2 பேர்களில் பாண்டியராஜன்( வயது 28) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகேஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

MUST READ