சுந்தர்.சி தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் கடைசியாக அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதற்கிடையில் சுந்தர் சி, ஒன் 2 ஒன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படத்திலும் கூட அனுராக் காஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒன் 2 ஒன் திரைப்படத்தை கே திருஞானம் இயக்கியிருக்கும் நிலையில் 24HRS புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து படத்தின் முதல் பாடலும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லரிலேயே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.