விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கந்தசாமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஷாகுல் ஹமீது மகன் அப்துல் ரஹ்மான்(32), பாண்டியன் மகன் சாய் (32), சுப்பிரமணி மகன் பிரேம்குமாா்(32), ஆறுமுகம் மகன் திருநாவுக்கரசு (32). நண்பா்களான இவா்கள் 4 பேரும் புதன்கிழமை விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு காரில் சென்றனா். திருநாவுக்கரசு காரை ஓட்டினாா்.
விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் கண்டமங்கலம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த 4 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனா்.
ஓய்வு பெறுவோரை மீண்டும் பணியமர்த்தும் முறையை கைவிட வலியுறுத்தி போராட்டம் (apcnewstamil.com)
தகவலறிந்த கண்டமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் அப்துல் ரஹ்மான் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
சாய், பிரேம்குமாா், திருநாவுக்கரசு ஆகியோா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.