Homeசெய்திகள்ஆவடிஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி

ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி

-

ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர் பலி

ஆவடியில் கிணற்றில் குளிக்கசென்ற வாலிபர்  பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஆவடி அடுத்த பங்காருபேட்டை பகுதியை சேர்ந்தவர் அஜித் (27) மெக்கானிக்  தொழில் புரிபவர். தாய் தந்தை இல்லாத காரணத்தால் தனது அத்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இவரது மெக்கானிக் கடைக்கு விடுமுறை விட்டுவிட்டு மதியம் அருகில் இருந்த கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். குளிக்கச் சென்ற பொழுது கிணற்றில் இருந்த படிக்கட்டில் பாசிகள் அதிக அளவில் இருந்ததால் குளிக்கும் பொழுது கால் வழுக்கி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

இவரது அத்தை நேற்று மதியத்திலிருந்து இவரை காணவில்லை என்று பல இடங்களில் தேடி வந்த நிலையில் இன்று காலை கிணற்றின் அருகே சில பொதுமக்கள் சென்ற பொழுது மெக்கானிக் அஜித் அணிந்திருந்த உடைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக ஆவடி தீயணைப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தேடிய போது அஜிதின் சடலத்தை மீட்டனர்.  தகவல் அறிந்து வந்த டேங்க் பேக்டரி காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ