Homeசெய்திகள்சினிமாநடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கிய நடிகர் வடிவேலு

நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கிய நடிகர் வடிவேலு

-

நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி உதவி வழங்கிய நடிகர் வடிவேலு

உடல் நலம் பாதிக்கப்பட்டு நிதி உதவிக்கோரிய நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் வடிவேலு நிதி உதவி வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில், நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட திரைப்படத்திலும்,ஒட்டுமொத்தமாக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் வெங்கல் ராவ்.

புதுக்கோட்டையில் பரபரப்பு – போதையில் ரகளை செய்த அண்ணனை தீர்த்துக் கட்டிய தம்பி கைது!

ஆந்திராவில் மாநில விஜயவாடாவில் தனது இல்லத்தில் தங்கியபடி மருத்துவ சிகிச்சை பெற்று வரும் வெங்கல்  ராவ், மேல் சிகிச்சைக்காக நிதி உதவி கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கை,  கால்கள் செயலிழந்தபடி கஷ்டப்படும் தனக்கு நிதி உதவி வழங்கி உதவுமாறு கூறியிருந்தார். சமூக வலைதளங்களில் அந்த வீடியோ வேகமாக பரவியதில் நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் , காமெடி நடிகர் பாலா ரூ.1 லட்சம் , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரம்  என கொடுத்து உதவியுள்ளனர்.

இந்நிலையில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக நடித்த நடிகர் வடிவேலு ரூ.1லட்சம் கொடுத்து உதவியுள்ளார். மேலும் வெங்கல் ராவுடன்  தொலைபேசி வாயிலாக 15 நிமிடத்திற்கு மேலாக உடல் நலம் விசாரித்து நம்பிக்கை தெரிவித்ததாகவும் அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

MUST READ