விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு தொழில் அதிகளவில் நடந்து வருகிறது. அன்மை காலமாக பட்டாசு தொழிற்சாலைகளில் அவ்வபோது உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் அப்பாவி தொழிலாளர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஏராளமானோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், இன்று காலை பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை பட்டாசு வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.