Homeசெய்திகள்சினிமாசூர்யா44 படப்பிடிப்பில் இணைந்த மலையாள பிரபலம் ஜோஜூ ஜார்ஜ்

சூர்யா44 படப்பிடிப்பில் இணைந்த மலையாள பிரபலம் ஜோஜூ ஜார்ஜ்

-

 நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் பாபி தியோல் வில்லனாக நடிக்க, திஷா பதானி நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 44-வது திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார்.
இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் நிறுவனமும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், சுஜித் ஷங்கர், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் ஜோஜூ ஜார்ஜ் சூர்யா44 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அந்தமானில் படப்பிடிப்பில் பங்கேற்பது போன்ற புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இவர் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ