நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் வரலட்சுமி சரத்குமார். இவர் விஜய், தனுஷ், சசிகுமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அதே சமயம் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சமீபத்தில் இருவருக்கும் தாய்லாந்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே பிரதமர் மோடி, ரஜினி, கமல் என பல பிரபலங்களை திருமணத்திற்கு வரவேற்று இருந்தார். அதன்படி ரஜினி, திரிஷா, ஆர்யா, சாயிஷா, மீனா, விக்ரம் பிரபு, விஷ்ணு விஷால், பிரபுதேவா ஆகியோர் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். அதைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு நடிகர் சித்தார்த், கிச்சா சுதீப், நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் வருகை தந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.