நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு தற்போது தனது 44 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பீட்சா, பேட்ட, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். சூர்யா 44 என்று தற்காலிகமான தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரித்து வருகின்றனர். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சூர்யா தவிர பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் 10ஆம் தேதி அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்தது.
அங்கு இரண்டு பாடல் காட்சிகளும் சண்டை காட்சிகளும் படமாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சூர்யா 44 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலரும் ஜெட் வேகத்தில் கார்த்திக் சுப்பராஜ் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மேலும் சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -