பாஜக, அதிமுக மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், கூட்டணிக்கு இபிஎஸ் வைக்கும் நிபந்தனைகளில் அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது என்றாலும், தமிழகத்தில் பாஜக படு தோல்வியையே சந்தித்திருக்கிறது. இதனையடுத்து தமிழ்நாடு பாஜகவில் இருந்து அடுத்தடுத்து பலர் நீக்கப்பட்டு வருகின்றனர். அண்ணாமலை அரசியலில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது
இதற்கு பிடி கொடுக்காத பாஜக, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழத்தில் படிக்க 6 மாதம் அனுப்பி அண்ணாமலைக்கு ஓய்வு கொடுக்கவும், பிறகு நாடு திரும்பியதும் தேசிய அரசியலுக்கு அழைக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படிப்பிற்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து 12 அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் . அப்படி இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார். இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் லண்டன் செல்ல இருக்கும் அவர் ஜனவரி வரை 5 மாதங்கள் அங்கேயே இருப்பார் என தெரிகிறது. வெளிநாடு பயணம் முடித்த பிறகே மீண்டும் தீவிர அரசியலில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.