Homeசெய்திகள்தமிழ்நாடுபகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் வெட்டிக்கொலை.. சென்னையில் பரபரப்பு..

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் வெட்டிக்கொலை.. சென்னையில் பரபரப்பு..

-


சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று மாலை பெரம்பூரில் உள்ள தனது வீட்டருகே ஆர்ம்ஸ்ட்ராங் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டினர்.

இதனை சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைதடுமாறி சரிந்து விழுந்தார். ஆம்ஸ்ட்ராங்கை தாக்கிவிட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து தப்பியோடிய கொலையாளிகளை தேடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

MUST READ