அண்ணாமலை அரைவேக்காடு ! வார்த்தைகளை சிதற விடும் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்துக்குரியது – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதை வாபஸ் பெறாவிட்டால் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தன்னால்தான் பாஜக வளர்ந்துள்ளது என்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கி உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் தலைவர்கள் குறித்து தொடர்ந்து பொய் தகவல்களை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அஜர்பைஜானிலிருந்து ஐதராபாத்திற்கு செல்லும் ‘விடாமுயற்சி’ படக்குழு!
விக்கிரவாண்டி தொகுதியில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி பழனிசாமி, நம்பிக்கை துரோகி என்ற பெயர் அவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாகரிகமற்ற அரசியல் பண்பாட்டை தமிழ்நாட்டில் விதைத்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என கூறியதை அண்ணாமலை வாபஸ் பெற வேண்டும் இல்லையெனில் அண்ணாமலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.
பாஜக வளர்ந்ததாக வார்த்தை ஜாலம் காட்டுகிறார் அண்ணாமலை. வெற்று விளம்பரங்களை செய்து களத்தில் தன்னை முன்னிலைப்படுத்த அண்ணாமலை பேராசைப்படுவதாகவும் அண்ணாமலை போன்ற தகுதி அனுபவம் இல்லாத அரைவேக்காடு தலைவர்களால் தான் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் கோவையில் கோடிக்காணக்கான பணத்தை வாரி இரைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டார்கள்.
டெல்லியில் பிரதமர் மோடியின் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்து விட்டு, தமிழகத்தில் அ.தி.மு.க.வின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிற வேலையில் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டாரா அல்லது இல்லையா என்று மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.
அ.தி.மு.க.வை பற்றி எங்களை போன்ற தொண்டர்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகிறது ? அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் அவசியமில்லை.
அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத, அரைவேக்காடு தனமான, பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி தயவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறாது.
அண்ணாமலையின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது. அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல இருக்கிறது. இது போன்ற குற்றச்சாட்டால் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் சேவையை யாரும் மறந்துவிட முடியாது.
அண்ணாமலை அ.தி.மு.க. வளர்ச்சியை, எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வார்த்தையை கொட்டுகிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை துரோகி என்று பேசிய வார்த்தையை அண்ணாமலை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும். இனியும் அ.தி. மு.க. தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.
அதிமுக தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை எந்த மாதிரியான விளைவுகளை எதிர்கொள்வார் எனத் தெரியாது” என ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.