நடிகர் தனுஷ் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக நடிகர் தனுஷ் தனது ஐம்பதாவது படமான ராயன் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் வெளியான ப. பாண்டி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காரணத்தால் ராயன் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்துள்ளார்.
#Raayan From July 26🔥#RaayanAudioLaunch pic.twitter.com/i8Z6BV9wMr
— Sun Pictures (@sunpictures) July 6, 2024
ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி வரும் நிலையில் படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ராயன் படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் ராயன் பட குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய தனுஷ், எஸ் ஜே சூர்யாவை போல் கலகலப்பாக பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மேலும் அவர் பேசும் போது, “நான் முதல் படத்தில் நடிக்கும் போது நான் ஒல்லியாக இருக்கிறேன். கருப்பாக இருக்கிறேன் என்று பலரும் என்னை கேலி செய்தனர். ஆனால் அதையெல்லாம் தாண்டி தற்போது 50 வது படம் வரை வந்திருக்கிறேன் என்றால் அது உங்களின் கரவொலியினால் மட்டும்தான்” என்று தெரிவித்தார்.
மேலும், “எஸ் ஜே சூர்யா சார் முதல் நாள் ஷாட் வைத்த போது, எதுக்கு உங்களுக்கு டைரக்ஷன் என்று கேட்டார். என்ன சார் முதல் நாளே இப்படி கேக்குறீங்க என்று நான் கேட்டேன். அப்போது அவர், இல்லை உங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறது. நீங்கள் மிகப்பெரிய நடிகர். அப்புறம் எதற்காக டைரக்ஷன் என்றார். எஸ் ஜே சூர்யாவின் அந்த வார்த்தை என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைத்தது” என்று பேசியுள்ளார்.