பெருங்காயம் என்பது நம் சமையலறையில் இருக்கக்கூடிய முக்கியமான பொருளாகும். குறிப்பாக சாம்பார், ரசம் போன்றவைகளுக்கு இந்த பெருங்காயம் பயன்படுத்தப்படுகிறது. இது இந்தியாவில் மட்டும் இல்லாமல் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மணம் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். பெருங்காயம் மணம் மட்டும் தரக்கூடியது இல்லை பல நன்மைகளையும் தரக்கூடியது.
அதாவது பெருங்காயம் நீரில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பெருங்காய நீரில் ஆக்சிஜனேற்றங்கள் அலற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை இருக்கின்றன. பெருங்காயம் என்பது உடலின் எடையை குறைக்க உதவுகிறது. இவை ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது. மேலும் இது இதய நோய் அபாயம் ஏற்படாமல் தடுக்கிறது. அதே சமயம் பெருங்காயம் தலைவலியை குறைக்கவும் வழிவகை செய்கிறது. எனவே பெருங்காய நீரை காலையில் எழுந்தவுடன் குடிப்பது செரிமான நொதிகளை அதிகரிக்க செய்வதோடு நம் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அடுத்ததாக நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகவும் விளங்குகிறது.
எனவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அளவு பெருங்காயத்தூள் சேர்த்து அதனை காலை வெறும் வயிற்றில் பருகி வாருங்கள். இந்த முறையை பின்பற்றுவதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் நல்லது.