Homeசெய்திகள்தமிழ்நாடுகாளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்து - 2 பேர் பலி

காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்து – 2 பேர் பலி

-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்து நடத்த இடத்தில் ஒரு அறை முழுவதுமே தரைமட்டமானது. இதில் மாரியப்பன் (45), முத்துமுருகன் (45) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர். அத்துடன் 2 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி படுகாயமடைந்த பெண்களை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ