மயிலாடுதுறை அருகே மதுபானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நண்பரின் மிச்சமான மதுபானத்தை எடுத்துக் குடித்த நண்பர் உயிரிழந்தார். கண்ணாத்தாள் படத்தில் வடிவேலு நகைச்சுவை காட்சியைபோல் உண்மையாககிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவரின் மகன் ஜோதி பாசு (32) வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இதனால் அவரது மனைவி சகிலா கோயம்புத்தூர் சென்று அங்கே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக நீண்ட நாட்களாக சந்திக்காமல் இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். ஊருக்கு கூப்பிட்டாலும் அவரது மனைவி வருவதில்லை. மேலும் அடிக்கடி இருவருக்கும் சண்டை ஏற்பட்ட காரணத்தினால் ஜோதி பாசு மன உளைச்சலில் இருந்துந்துள்ளார்.
தன்னுடன் ஊருக்கு வந்து வாழ வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டதால் குடிகாரனுடன் வந்து வாழ்க்கை நடத்த முடியாது என்று கராராக பேசிவிட்டார். மனைவியும் வாழவரவில்லை பிள்ளைகளையும் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த ஜோதி பாசு நேற்று மதியம் காரைக்கால் மாவட்ட எல்லையில் நல்லாத்தூரில் உள்ள மதுபான கடையில் முழுக்க மதுகுடித்துவிட்டு மேலும் ஒரு மது பாட்டில் வாங்கி கொண்டு வரும்பொழுது அத்துடன் பூச்சி மருந்தையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஊருக்கு வந்தவர் நிலைதடு மாறிய நிலையில் வீட்டின் அருகே தென்னம்பிள்ளை சாலை பகுதியில் அமர்ந்துபூச்சி மருந்தை மதுவில் கலந்து குடித்துள்ளார். பாதி பாட்டிலுக்கு மேல் குடிக்க முடியாதால் அருகில் வைத்துவிட்டு போதையில் புலம்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதிக்கு அவரது நண்பர் ஜெரால்டு(24) வந்துள்ளார். இவரும் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் நண்பர்கள். ஜெரால்டும் நிரம்ப போதையில் இருந்துள்ளார். அப்பொழுது தன் நண்பர் குடித்துவிட்டு சாய்ந்திருப்பதை கண்ட ஜெரால்டு மீதம் இருந்த மது பாட்டிலை எடுத்து குடித்தார். இதைக்கண்ட ஜோதிபாசு அதில் விஷம் கலந்து இருக்கிறது என்று முனகிக் கொண்டே இருந்தார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 66-ஆக உயர்வு
அதை ஜெரால்டு காதில் வாங்கிக் கொள்ளாமல் மீதம் இருந்த மதுவை முழுதும் குடித்துவிட்டு பாட்டிலை தூக்கி வீசிவிட்டார். பின்னர் விஷம் கலந்து இருந்த மதுவை நண்பன் குடித்து விட்டார் என்று தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார் ஜோதிபாசு. அதை கேட்கும் நிலையில் ஜெரால்டு இல்லை. நீண்ட நேரமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் அதே பகுதியிலேயே ஜோதிபாசு குமட்டி குமட்டி மதுபானத்தை வாந்தி எடுத்துள்ளார்.
பின்னர் வெகு நேரத்துக்கு பிறகு ஓரளவு நினைவுக்கு வந்த ஜோதிபாசு திருக்கிட்டு தான் மீதம் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை ஜெரால்டு குடித்துவிட்டு மயங்கி கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக ஜெரால்டு வீட்டிற்கு ஜோதிபாசு தகவல் கொடுக்கவே அங்கு வந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஜெரால்டு உயிரிழந்தார். மேலும் ஜோதி பாசு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பெரம்பூர் காவல்துறையினர் ஜெரால்டுயின் உடலை உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜோதிபாசு கூறிய காரணங்கள் சரிதானா வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ராமதாஸ்
கண்ணாத்தாள் படத்தில் வரும் வடிவேலின் சூனா பானா நகைச்சுவை காட்சியில் விஷன் கலந்து வைத்திருந்த மதுவை அவர் குடிப்பதற்குள் வடிவேல் எடுத்துகுடித்துவிடுவார். ஆனால் உயிர் காப்பாற்றப்படும். தற்போது அதேபோன்ற சம்பவம் நடந்து உண்மையில் இளைஞரின் உயிரை பரிதாபமாக பரித்திருப்பது பெரம்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.