Homeசெய்திகள்தமிழ்நாடுபதஞ்சலியின் 14 பொருட்கள் விற்பனைக்கு தடை

பதஞ்சலியின் 14 பொருட்கள் விற்பனைக்கு தடை

-

- Advertisement -

பதஞ்சலி போலி விளம்பர விவகாரத்தில், தங்கள் நிறுவனத்தின், 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பதஞ்சலியின் 14 பொருட்கள் விற்பனைக்கு தடைஇந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதஞ்சலி சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரகண்ட் அரசின் உத்தரவைத் தொடர்ந்து, 14 பொருட்களின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது.

நாடு முழுதும் உள்ள, 5,606 விற்பனை நிலையங்களில் இருந்து அந்தப் பொருட்களை விலக்கி கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இந்த, 14 பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது

பதஞ்சலியின் 14 பொருட்கள் விற்பனைக்கு தடைபதஞ்சலி நிறுவனத்தின் தடைசெய்யப்பட்ட 14 பொருட்களின் விபரம்:

ஸ்வசாரி கோல்டு, ஸ்வசாரி வாட்டி, பிரோன்சோம், ஸ்வசாரி பிரவாஹி, ஸ்வசாரி அவாலே, முக்தா வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிபிடாம், பிபிகிரித், மதுகிரித், மதுனாஷினி வாட்டி எக்ஸ்ட்ரா பவர், லிவாம்ரித் அட்வான்ஸ், லிவோகிரித், ஐகிரித் கோல்டு, பதஞ்சலி திருஷ்டி ஐ டிராப் ஆகியவை.

MUST READ