வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் கடைசியாக அனுமான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனுஷின் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச் தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. ரஜினி, சித்தார்த், திரிஷா, நந்தங்குடி பாலகிருஷ்ணா, கிச்சா சுதீப் போன்ற பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. காலை தென்னிந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.
அதைத் தொடர்ந்து, மாலையில் திருமண உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பின்பு, கடற்கரையில் அழகான ரொமாண்டிக் கொண்டாட்டமும் நடந்தது. இந்தத் திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரசிகர்களும் வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.