Homeசெய்திகள்சினிமாநயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர்.நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! அதேசமயம் இவர் நடிப்பதில் மட்டுமல்லாமல் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பல படங்களை தயாரித்தும் வருகிறார். இவர் தற்போது கவின் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையில் மண்ணாங்கட்டி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் யாஷ் நடிக்கும் டாக்ஸிக் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே அதைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனமும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

ஆனால் இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கவில்லை. அவர் திரிஷா நடிப்பில் மாசாணி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்க உள்ளார். எனவே மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை வேறொரு பிரபல இயக்குனர் தான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் மேலும் படத்தை இயக்கப் போவது யார் என்பது குறித்து அப்டேட்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ