Homeசெய்திகள்சினிமாயோகி பாபு நடிக்கும் 'போட்'..... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

யோகி பாபு நடிக்கும் ‘போட்’….. முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

யோகி பாபு நடிக்கும் போட் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.யோகி பாபு நடிக்கும் 'போட்'..... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறி வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மண்ணாங்கட்டி, வானவன், சட்னி சாம்பார், ஜோரா கைய தட்டுங்க போன்றவை யோகி பாபு நடிப்பில் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இந்தி மலையாளம், தெலுங்கிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் யோகி பாபு. இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் யோகி பாபு, இம்சை அரசன் 23ம் புலிகேசி பட இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அதன்படி யோகி பாபு, சிம்பு தேவன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படத்திற்கு போட் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பணிகளை கையாண்டுள்ளார். காமெடி கலந்த சர்வைவல் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சொக்க நானும் எனும் முதல் பாடல் இன்று (ஜூலை 13) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக்குழுவினர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ