- Advertisement -
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி பிரகாசமானதை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் (86) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க சென்னை அண்ணா அறிவாலயம் சென்றார். இதில் அவர் அறிவாலயத்திற்குள் சென்ற சிறிது நேரத்திற்குள் மயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.