ஜிம்பாவே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டமானது ஜிம்பாவேவில் உள்ள ஹாரரே மைதானத்தில் கடந்த 6-ந் தேதி நடைபெற்றது. போட்டியில் இந்திய அணியானது சுப்மான் கில் தலைமையிலும் ஜிம்பாவே அணியானது சிக்கந்தர் ராசா தலைமையிலும் களம் கண்டன. இப்போட்டியில் ஜிம்பாவே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டி இதற்கு அடுத்த நாளில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் 5வது டி20 போட்டியில் இன்று விளையாடுகிறது. இங்கு நடைபெறும் போட்டிகள் அனைத்தும் ஜிம்பாவேவில் உள்ள ஹாரரே மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர் தோல்வியிலிருந்து விடுபட்டு ஜிம்பாவே அணி இப்போட்டியில் வெற்றி பெற கடுமையாக முயற்சிக்கும். அதே சமயம் இந்திய அணியானது தங்களது வெற்றிப்பயணத்தை தொடர முயற்சிக்கும் என்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. இதில் முதலாவது பேட்டிங்கில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 167 ரன்கள் எடுத்தது. அணியின் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 58 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 168 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாவே அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. இதில் இரண்டாவது பேட்டிங்கில் அதிகபட்சமாக டியான் மேயர்ஸ் 34 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தொடர் நாயகனாக வாஷிங்கடன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டார்.