Homeசெய்திகள்சினிமாதிருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் தம்பதி!

திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரலட்சுமி – நிக்கோலாய் சச்தேவ் தம்பதி!

-

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் தம்பதி!மேலும் இவர் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் மிரட்டி இருக்கிறார். சமீப காலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார் வரலட்சுமி. இந்நிலையில் அடுத்ததாக வரலட்சுமி, தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகை வரலட்சுமிககும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச் தேவுக்கும் கடந்த மார்ச் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் தம்பதி!அதன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினி, திரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர். அதன் பின்னர் கடந்த ஜூலை 10ஆம் தேதி தாய்லாந்தில் வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்கள் பலரும் வரலட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் வரலட்சுமி சரத்குமார், நிக்கோலாய் சச்தேவ் தம்பதியும் அவர்களுடன் இணைந்து நடிகர் சரத்குமாரும் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லாபில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் தம்பதி!அப்போது பேசிய நடிகை வரலட்சுமி, “ரொம்ப நன்றி. இப்போது தான் உங்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. என் காதல் அவர் தான். என் உயிர் சினிமா என்று எல்லோருக்கும் தெரியும். திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்” என்றார்.திருமணத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் தம்பதி!

அவரை தொடர்ந்து பேசிய நடிகர் சரத்குமார், “திருமணத்திற்கு அனைவரையும் அழைக்க கூடிய நேரம் இல்லாததால் அழைக்க முடியவில்லை. நானும் உங்களில் ஒருவன் தான். திருமணம் முடிந்த பிறகு உங்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். வரலட்சுமி தொடர்ந்து நடிப்பார். வரலட்சுமி, நிக்கோலாய் சச்தேவ் பற்றி அறிமுகப்படுத்தும் போது அவரை ரொம்ப பிடித்திருந்தது.‌ இறைவனால் இறை அருளால் இவர்கள் மனம் முடித்துள்ளனர்.‌ சாதாரணமாக நடிகனாக வந்த என்னை சுப்ரீம் ஸ்டாராக உயர்த்தியதற்கு நன்றி” என தெரிவித்தார்.

MUST READ