spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னையில் மெட்ரோ ரயில் பணி; கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் மெட்ரோ ரயில் பணி; கிண்டியில் போக்குவரத்து மாற்றம்

-

- Advertisement -
kadalkanni

சென்னை மெட்ரோ ரயில் பணி காரணமாக கிண்டி கத்திப்பாராவில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

சென்னை மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை பணிகள் மேற்கொள்வதால், கத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதிலும் மவுண்ட், பூந்தமல்லி சாலையை இணைக்கும் பணியில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.. இந்த பணிகள் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “மவுண்ட் பூந்தமல்லி ரோடு-ஆர்மி ரோடு சந்திப்பில் புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை பணிகள் மேற்கொள்வதால், கத்திப்பாரா நோக்கி செல்லும் போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல பரிந்துரைக்கப்பட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி வரையில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

* கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து போரூர் செல்லும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

* போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பிலிருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலையில் நேராக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் மவுண்ட் பூந்தமல்லி சாலை – பெல் ராணுவ சாலை சந்திப்பில் புதியதாக அமைந்துள்ள சாலை வழியாக டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூவில் (வலதுபுறம் திரும்பி) இலகுரக வாகனங்கள் மட்டும் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை வழியாக பட்ரோடு சென்று இலக்கை அடையலாம்.

* மற்ற வாகனங்கள் கண்டோன்மென்ட் சாலையில் இடது புறம் திரும்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தெரு, தனகோட்டி ராஜா தெரு- சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் தெற்கு பகுதி சாலை வழியாக ஒலிம்பியா 100 அடி சாலை சந்திப்பு அடைந்து வாகனங்கள் கத்திப்பாராவை அடைய வலது புறமாகவும், வடபழனியை அடைய இடது புறமாகவும் தங்கள் இலக்குகளை நோக்கி செல்லலாம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

|

MUST READ