HomeBreaking Newsவாட்ஸ் அப் குழு அமைத்து ஆன்லைன் ட்ரேடிங்; 14 கோடி மோசடி செய்த 6 பேர்...

வாட்ஸ் அப் குழு அமைத்து ஆன்லைன் ட்ரேடிங்; 14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது. பகீர் பின்னணி தகவல்கள்

-

வாட்ஸ்அப் Whatsapp குழு அமைத்து ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் 500 சதவீதம் லாபம் தருவதாக கூறி 14 கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை சேர்ந்த ஆறு பேரை தமிழக சைபர் க்ரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

சைபர் கிரைம் குற்றவாளிகள், வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் குழு தொடங்கி ஆன்லைன் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர்.மேலும் மக்கள் நம்பும் வகையில் Share Investment App-களை உருவாக்கி அதில் பலரும் அதிக லாபம் பெற்றது போல ஸ்க்ரீன் ஷாட்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்து நம்ப வைத்து மோசடி செய்கின்றனர். இவ்வாறு போலியான குறுஞ்செய்தி வெளியிட்டு பொது மக்களை நம்ப வைத்து Online Share Trading என்ற போர்வையில் பணம் பறித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 2024-ம் தேதி வாட்சாப் மூலம் தொடர்பு கொண்ட சைபர் மோசடி கும்பலை சேர்ந்த ஒருவர் Black Rock Asset Management Business School என்ற நிறுவனம் வைத்திருப்பதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். Black Rock நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரண்டு மாதத்தில் 500 % லாபம் பெற்று தருவதாகவும் , நிறுவனத்திற்கு SEBI அனுமதி இருப்பதாக கூறி மோசடி செய்துள்ளனர்.

முதலீடு மூலம் பெற்ற லாபத்தில் தனக்கு சேவை கட்டணம் 20 சதவீதம் தர வேண்டும் என கூறி நம்ப வைத்து, BR IIFL PRo என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வைத்துள்ளனர். அதன் மூலம் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 14 கோடியை ஒருவர் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த பணம் திரும்ப கிடைக்காத நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தேசிய சைபர் கிரைம் போர்டில் புகார் அளித்ததன் பேரில் மாநில சைபர் கிரைம் பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு மோசடி செய்யப்பட்ட பணம் வரவு வைக்கப்பட்ட 13 வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டன.

பின்னர் சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையக சைபர் கிரைம் தனிப்படை போலிசார், விரைந்து செயல்பட்டு மோசடி செய்யப்பட்ட பணம் ரூபாய் 21 லடசத்து ,50,000 ஆயிரத்தை தனது வங்கி கணக்கில் பெற்றுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செங்கல்பட்டை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை கைது செய்து, பின்னர் வாக்குமூலத்தின் அடிப்படையில் தலைமறைவில் இருந்த சென்னை நீலாங்கரையை சேர்ந்த மதன் , திருநின்றவூரை சேர்ந்த சரவணபிரியன், ஆவடியை சேர்ந்த சதீஷ்சிங், சென்னை-புளியந்தோப்பை சேர்ந்த ஷாபகத் மற்றும் மதுரை- பொன்மேனியை சேர்ந்த மணிகண்டன்- ஆகிய சைபர் மோசடி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர்.

இதில் மணிகண்டன் என்பவர் மோசடி செய்யப்பட்டபணத்தை ஷபாகத் என்பவர் மூலம் அமெரிக்க டாலராக மாற்றம் செய்ய முயற்சி செய்துள்ளார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது.

இந்த சைபர் குற்ற செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட வடமாநில கும்பலை கைது செய்யவும் மோசடி செய்யபட்ட பணத்தை மீட்கவும் தமிழக சைபர் க்ரைம் பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ