HomeBreaking Newsபுதுடெல்லியில் நடைபெறும் 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!

புதுடெல்லியில் நடைபெறும் 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!

-

70வது தேசிய விருது வழங்கும் விழா இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். புதுடெல்லியில் நடைபெறும் 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!கடந்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களையும் சிறந்த நடிகர், நடிகைகளையும் கௌரவிக்கும் வகையில் 70ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. 2022 ஆம் ஆண்டு கோவிட் தொற்று காரணமாக தேசிய விருது வழங்கும் விழாவானது 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்று நடைபெறும் விழாவில் சிறந்த தமிழ் படத்திற்காக பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கப்படுகிறது. புதுடெல்லியில் நடைபெறும் 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!அடுத்தது காந்தாரா எனும் கன்னட திரைப்படத்தில் நடித்ததற்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. மேலும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது நடிகை நித்யா மேனனுக்கு வழங்கப்படுகிறது. அதே போல் நடன இயக்குனருக்கான தேசிய விருது சதீஷுக்கு வழங்கப்படுகிறது. அடுத்தது சிறந்த பின்னணி இசைக்காக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்காக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. புதுடெல்லியில் நடைபெறும் 70 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!இதே போல் சிறந்த இசை வடிவமைப்பாளருக்காக பொன்னியின் செல்வன் பாகம் 1 பட இசை வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. அத்துடன் பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது ரவிவர்மனுக்கு வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த நடனம் சிறந்த வசனம் சிறந்த திரைக்கதை சிறந்த குழந்தை நட்சத்திரம் சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை என பல மொழிகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுகின்றன.

MUST READ