HomeBreaking Newsஇசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கையில் அடித்த சூறாவளி... 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக...

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கையில் அடித்த சூறாவளி… 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

-

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்கையில் அடித்த சூறாவளி… 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்கையில் அடித்த சூறாவளி... 29 ஆண்டுக்கால திருமண பந்தத்தை முறித்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு

ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாயிரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு THE END கார்டு போட்டுள்ளனர்.

💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்துஉயிர் தாங்கி நான் இருப்பேன்மலர் கொண்ட பெண்மை வாராமல் போனால்மலை மீது தீக்குளிப்பேன்என் உயிர் போகும் போனாலும் துயர் இல்லை கண்ணேஅதற்காக வா பாடினேன்வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணேஅதற்காக தான் வாடினேன்முதலா முடிவாஅதை உன் கையில் கொடுத்துவிட்டேன்….♫♫♫

ரூ.3 கோடி வரை சம்பளம் வாங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்  ஸ்டைலிஸ்ட் கூட இல்லாத நபர் அதற்குப் பின்னால் இருந்த ஒரு காரணம் ….ஒரே காரணம் அவர் மனைவி சாய்ரா பானு.

ஏ.ஆர்.ரஹ்மானின் அன்பு மனைவி சாய்ரா பானு தான் அவரது ஒப்பனையாளர் என்றும் பல பொது நிகழ்ச்சிகளிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் சாய்ரா பானு தேர்ந்தெடுக்கும் ஆடைகளை அணிந்துக் கொள்வதாக ரஹ்மான் கூறியுள்ளார். அவரது ஒப்பனையாளர் வேலையை அவரது  மனைவி மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார் எனவும் பத்து, பதினைந்து வருடங்களாக அவருடைய ஆடைகள் அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறார் என்றும் அவர் அதை அனுபவித்து செய்கிறார், என  ரஹ்மான் தெரிவித்தார்.

மற்ற கணவன் மனைவி போல் அவர்கள் இருவரும் பைக்கில் ரவுண்ட் செல்வோம் என பகிர்ந்துள்ளார் சாயிரா பானுவும். இப்படி எல்ல கிரேடிட்டும் மனைவி சாயிராவுக்கு என கூறும் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்கையில் அடித்த சூறாவளி.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவு அவர்களுக்கிடையே உணர்ச்சி அழுத்தத்தின் பெயரில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மிக ஆழமாக நேசித்த போதிலும் சில கஷ்டங்கள் மற்றும் வேதனைகள் தீர்க்க முடியாத வலியை உருவாக்கியதால் இம்முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல, யாராலும் அவர்களுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த முடியாது என்ற நிலையில் அதிக வலி மற்றும் வேதனையுடன் சாய்ரா பானு இந்த முடிவை எடுத்துள்ளதாக  கூறப்படுகிறது. இந்த கடினமான சூழலில் தங்களின் முடிவை  ஆதரித்து தங்களுக்கான தனியுரிமையை கொடுக்கும் படியும் சாய்ரா பானு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் ரஹ்மான் – சாய்ரா பானுவின் மகனான ஏ. ஆர். அமீன், தனது இன்ஸ்டா பக்கத்தில், “இந்த நேரத்தில் எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு அனைவருடனும் அனுப்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் புரிதலுக்கு நன்றி” என்றும் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ