திருமுல்லைவாயிலில் தனியார் கம்பெனியில் பயங்கர தீவிபத்து அருகே உள்ள பள்ளியில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆவடி அருகே திருமுல்லைவாயலில் தின்னர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்து அருகே உள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பரவியது. அப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்றகும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பெயிண்டில் சேர்க்கப்படும் தின்னரில் பிடித்த தீ எரிந்து வேகமாக பள்ளிக்குள் சென்றதால் பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு தீ பரவி இரண்டு சக்கர வாகனங்கள் எரிந்து வருகிறது. மூன்றுக்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்து வருகின்றனர்.
பின்னர் ரசாயனம் கட்டுக்கடகாமல் இருந்து வருவதால் கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி வளாகத்திலும் தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி ,வில்லிவாக்கம், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட தகவல் தெரிந்ததை அடுத்து மாணவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மேலும் தீ மற்ற இடத்தில் பரவாமல் இருக்க தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார்.
இப்படி செய்யாதீங்க.. சமக்ர சிக்ஷாவும், தேசிய கல்வி கொள்கையும் ஒன்றல்ல – ஸ்டாலின் கடிதம்..