சூரி நடிக்கும் மாமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சூரி ஆரம்பத்தில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பரோட்டா சூரியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அந்த வகையில் இவர் சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். அதன் பின்னர் இவர் வெற்றிமாறன் இயக்கத்தின் வெளியான விடுதலை பாகம் 1 படத்தின் மூலம் கதாநாயகனாகவும் உருவெடுத்து தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாமன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூரி. இந்த படத்தினை விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்குகிறார்.
இதில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லக்ஷ்மி ராஜ்கிரண், விஜி சந்திரசேகர், சுவாசிகா, பாபா பாஸ்கர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தான் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர்களை பார்க்கும்போது நடிகர் சூரி, கருடன் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார் போல் தெரிகிறது. அதேசமயம் இந்த படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது என்பதும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் 2025 கோடையில் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.