HomeBreaking Newsதரமான சம்பவம் செய்த ஆதிக்.... பட்டாசாய் வெடிக்கும் 'குட் பேட் அக்லி' டீசர்!

தரமான சம்பவம் செய்த ஆதிக்…. பட்டாசாய் வெடிக்கும் ‘குட் பேட் அக்லி’ டீசர்!

-

- Advertisement -

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.தரமான சம்பவம் செய்த ஆதிக்.... பட்டாசாய் வெடிக்கும் 'குட் பேட் அக்லி' டீசர்!

தமிழ் சினிமாவில் ஆதிக் ரவிச்சந்திரன் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பிறகு இவர் சில படங்களை இயக்கியிருந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படம் தான் இவருக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதைத்தொடர்ந்து இவர் என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்தான் அஜித்துடன் கூட்டணி அமைக்கப் போவதாக அறிவித்தார் ஆதிக். தரமான சம்பவம் செய்த ஆதிக்.... பட்டாசாய் வெடிக்கும் 'குட் பேட் அக்லி' டீசர்!அதன்படி மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதிக், அஜித் கூட்டணியில் குட் பேட் அக்லி படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான போதே இப்படம் 2025 பொங்கலுக்கு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தால் தற்போது இப்படமானது 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.தரமான சம்பவம் செய்த ஆதிக்.... பட்டாசாய் வெடிக்கும் 'குட் பேட் அக்லி' டீசர்! இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். ஏறத்தாழ இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித், தீனா பட லுக்கில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை பார்க்கும்போது ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் அஜித் இந்த படத்தில் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடித்திருக்கிறார் போல் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் ஆக்சன் காட்சிகளும் பின்னணி இசையும் தெறிக்க விடுகின்றன. இந்த டீசரில் தீனா அஜித், பில்லா அஜித்தை காண முடிகிறது. அதுமட்டுமில்லாமல் ரெட் படத்தில் அஜித் சொல்லும் அது என்ற டயலாக்கும் இடம்பெற்றுள்ளது. அஜித் தனது வெறித்தனமான லுக்கில் மிரட்டுகிறார். ஆதலால் அஜித்தின் தீவிர ரசிகன் ஆதிக் தரமான சம்பவம் செய்துள்ளார் என ரசிகர்கள் பலரும் இந்த டீசரை வைரலாக்கி வருகின்றனர்.

MUST READ