HomeBreaking Newsஆரோக்யா பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

ஆரோக்யா பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

-

தமிழ்நாடு முழுவதும் ஆரோக்கியா பால் விலை உயர்ந்துள்ளது. பால், தயிர் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விலை உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆரோக்யா பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

தமிழகத்தில் அரசு நடத்தி வரும் ஆவின் பால் மட்டுமின்றி ஆரோக்கியா, திருமலா,அமுல் , நந்தினி, ஸ்ரீனிவாசா உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தனியார் நிறுவனங்கள் சுமார் 1.50 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல் தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது தங்களின் விருப்பதற்கு ஏற்றவாறு பால் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஆவின் பாலுக்கு அடுத்தபடியாக விற்பனை செய்யப்படும் ஆரோக்யா பால் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை ஏற்றம் தமிழ்நாடு மட்டுமல்லாது  ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு நிறம் (FULL CREAM): 1 லிட்டர் ரூ.67க்கும், 1/2 லிட்டர் ரூ.37க்கும்;

பச்சை நிறம் (STANDARDIZED): 1 லிட்டர் ரூ.60க்கும் , 1/2 லிட்டர் ரூ.32க்கும்;

ஊதா நிறம் (TONED): 1 லிட்டர் ரூ.52க்கும் , 1/2 லிட்டர் ரூ.28க்கும்;

தயிர் 1 லிட்டர் ரூ.68க்கும் – 1/2 லிட்டர் ரூ.37க்கும் விற்பனையாக உள்ளது.

மேலும் இந்த பால் விலை உயர்வுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ”ஆரோக்யா நிறுவனம் பால் விலையை உயர்த்துவதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயராத நிலையில், பால் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து மேலும் இந்த விலை உயர்வு பொதுமக்களை பாதிக்கும் என்பதால் தனியார் நிறுவனங்களின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

MUST READ