ஆர்யாவின் மிஸ்டர் எக்ஸ் படத்திலிருந்து ஹய்யோடி பாடல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மிஸ்டர் எக்ஸ். இந்த படத்தில் ஆர்யாவுடன் இணைந்து கௌதம் ராம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், அனகா, அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க திபு நினன் தாமஸ் இதற்கு இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படமானது ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கிறது. அதன்படி ஏற்கனவே படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அதே சமயம் சமீபத்தில் இந்த படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இருந்து ஹய்யோடி எனும் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த பாடல் ஆர்யா மற்றும் அனகா ஆகிய இருவருக்குமான காதல் பாடலாகும். இந்த பாடலை கபில் கபிலன் பாடியிருக்கும் நிலையில் கிருத்திகா நெல்சன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.