HomeBreaking Newsஅதர்வாவின் 'இதயம் முரளி' படத்திலிருந்து 'இதயா' பாடல் வெளியீடு!

அதர்வாவின் ‘இதயம் முரளி’ படத்திலிருந்து ‘இதயா’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

அதர்வாவின் இதயம் முரளி படத்திலிருந்து இதயா பாடல் வெளியாகி உள்ளது. அதர்வாவின் 'இதயம் முரளி' படத்திலிருந்து 'இதயா' பாடல் வெளியீடு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அதர்வா தற்போது டிஎன்ஏ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் அதர்வா, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அடுத்தது இவர், டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இதயம் முரளி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் அதர்வா இதயா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து கயடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இசையமைப்பாளர் தமன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இப்படத்திற்கு இசையும் அமைக்கிறார். காதல் மற்றும் நட்பு சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேசமயம் இப்படத்திலிருந்து வெளியான அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இதயா எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை விஷால் மிஸ்ரா பாடியுள்ள நிலையில் இப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ