HomeBreaking Newsகவனம் ஈர்க்கும் 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கவனம் ஈர்க்கும் ‘பைசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

-

- Advertisement -

பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.கவனம் ஈர்க்கும் 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!தமிழ் சினிமாவில் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர், விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் பைசன் (காளமாடன்)
எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். துருவ் விக்ரமின் மூன்றாவது படமான இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தினை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் அப்பிளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
கவனம் ஈர்க்கும் 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!இந்த படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த போஸ்டர் இயக்குனர் மாரி செல்வராஜின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு (மார்ச் 7) வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ