HomeBreaking Newsஅரசு பேருந்துகளில் முன்பதிவு - குலுக்கல் முறையில் BIKE பரிசு

அரசு பேருந்துகளில் முன்பதிவு – குலுக்கல் முறையில் BIKE பரிசு

-

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு பரிசு அறிவிப்பு.

அரசு பேருந்துகளில் முன்பதிவு - குலுக்கல் முறையில் BIKE பரிசு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் வலைதளமான https://www.tnstc.in, TNSTC செயலி  மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு செய்வதற்காக பயணிகளுக்கு 60 நாளுக்கு முன்னரே முன்பதிவு செய்து  பயணம் செய்யும் வகையில் தமிழக அரசு பேருந்துகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தினசரி சுமார் 20,000 பயணிகள் முன் பதிவு செய்து தற்போது வரை பயணம் செய்து வரும் சூழ்நிலையில் முன்பதிவு செய்பவர்களை  ஊக்குவிக்கும் விதமாக பரிசு தொகை திட்டம் 2024 ஜனவரி  மதத்திலிருந்து வழங்கப்பட்டு வருகிறது .

வார நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மட்டும் பயணிகள் அரசு பேருந்தில் செல்வதை தவிர்த்து சாதாரண நாட்களிலும் பயணிகள் கூட்டத்தை அதிகரிக்க செய்ய நடப்பு ஆண்டு முதல் சாதாரண நாட்களில் அரசு பேருந்துகளில் ஆன்லைன் வழியாக புக் செய்து செல்லும் பயணிகளில் 3 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ. 10,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜனவரி முதல் மே 2024 வரை ஒவ்வொரு மாதமும் குலுக்கல் முறையில் மூன்று வெற்றியாளருக்கு தளா ரூ. 10,000 வழங்கப்பட்டுவந்தது.

பின்னர் ஜுன் 2024 முதல் தறபோது வரை 13 நபர்களுக்கு என திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதல் 3 பேருக்கு ரூ.10,000 மும் மீதி 10 பேருக்கு ரூ.2000மும் வழங்கப்பட்டது. இது வரை 30  நபர்கள் தளா ரூ.10,000 மும் , 50 நபர்கள் தளா ரூ.2000 மும் பெற்று பயனடைந்துள்ளனர்.

பயணிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் குலுக்கல் முறையில் பரிசுகள் வெல்ல வாய்ப்பு வழங்கப்படும் வகையில்  தற்போது வழக்கமான மாதாந்திர குலுக்கல் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் ஒரு சிறப்பு குலுக்கல் முறை தற்போது போக்குவரத்து கழகம் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 2024 நவம்பர் மாதம் முதல், வாரத்தின் அனைத்து நாட்களிலும்  முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளின் பயண சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரூ.10,000 வழங்கப்பட்டு மற்ற 10 வெற்றியாளருக்கு ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு குலுக்கல் மூலமாக புதிதாக இந்த முறை பயன்படுத்தக்கூடிய புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முன்பதிவு செய்யக்கூடிய பயணிகளுக்கு முதல் 3 பயணிகளுக்கு உயர் மதிப்புடைய பரிசுகள் வழங்கப்படும். நவம்பர் 21 முதல் 2025 ஜனவரி 20 ஆம் தேதி  வரை வாரத்தில் அனைத்து நாட்களிலும் பயணம் செய்யப்படும். அனைத்து முன்பதிவு மற்றும் சிறப்பு குலுக்களுக்கு பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் பரிசாக இரு சக்கர வாகனம் , இரண்டாம் பரிசாக ஸ்மார்ட் டிவி, மூன்றாம் பரிசாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

பொங்கலுக்குப் பிறகு சிறப்பு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளனர்.

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி : வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகளாக மாற்ற பரிந்துரை

 

MUST READ