HomeBreaking Newsசென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! - உச்ச...

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

-

சுரோஷ் குமார் தாக்கூர் தலைமையிலான அதிகாரி குழு விசாரிக்கும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! -  உச்ச நீதிமன்றம்

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சிறுமியின் தாயார் உயர் நீதிமன்றத்தில் குற்றவாளியை விரைந்து கைது செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

சென்னை, அண்ணா நகர், அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்ற பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை, குற்றம் சுமத்தப்பட்டவரின் கண் முன்னரே ஆய்வாளர் ராஜீவ் தாக்கி  மிரட்டி உள்ளார்.  பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைதளத்தில் அது தொடர்பான வீடியோ வெளியிட, இந்த அக்கிரமம் குறித்து அனைவருக்கும் தெரியவந்தது.

அதன் பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் செப்.24ம் தேதி தானாக விசாரணைக்கு வழக்கை எடுத்துக்கொண்டது. இவ்வழக்கு அக்.1ம் தேதி விசாரணைக்கு வந்த போது,  மத்திய புலனாய்வு துறை (CBI) விசாரணை செய்ய  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! -  உச்ச நீதிமன்றம்

சென்னை காவல் துறை சார்பில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கை நவ.11 விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழக காவல் துறையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து விசாரணை செய்யவும், அதற்கு தமிழகத்தில் பணிபுரியும் வேறு மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 7 பேர் பட்டியலையும், அந்த அதிகாரிகள் பற்றிய சுருக்கமான விபரங்களுடன் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ஒன்பது ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பி.பார்த்திபன், அந்த சிறுமியின் தாய் நீதிமன்றத்துக்கு வந்திருப்பதாக நீதிபதிகள் முன்பு தெரிவித்தார்.

அப்போது நீதிபதி விசாரணை அதிகாரிகள் பட்டியல் எங்கே ? என தமிரக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, நீதிபதிகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை வரவழைத்து,இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கை ஒப்படைத்தால் வழக்கு 4 அல்லது 5 ஆண்டுகள் வரை ஆகும். விசாரணையின் கோணமும் எவ்வாறு செல்கிறது என்பதையும் கூற முடியாது. எனவே தமிழ்நாடு காவல்துறையின் சிறந்த அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் ஆகியோர்களை வைத்து விசாரணை நடத்தலாம். நடத்துவோம் என்றும் அதனை நீதிமன்றம் கண்காணிக்கும் என சிறுமியின் தாயிடம் தெரித்துள்ளதாக நீதிபதிக்கு பதில் அளித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கை விசாரிக்க தமிழ்நாடு கேடரை சேர்ந்த மற்றும் தமிழ்நாட்டை சாராத ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும், அந்த வகையில் டி.ஐ.ஜி சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுகிறது. இதில் ஆவடி சரக சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஐமன் ஜமால், சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் பிருந்தா, ஆகிய அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.

இந்த சிறப்பு புலனாய்வு குழு தினந்தோறும் விசாரணையை நடத்த வேண்டும். அதனை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும், சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய தகுதியான அமர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட அமர்வு முன்பு சிறப்பு புலனாய்வு குழுவானது தனது விசாரணை நிலை அறிக்கையை வாரம் ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அந்த அறிக்கை அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை விசாரிக்க உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும். சுரேஷ் குமார் தாக்கூர் டி.ஐ.ஜி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த வழக்கு செலவுக்காக ரூபாய் 50ஆயிரத்தையும், மேலும் இதர செலவுக்காக 25ஆயிரம் ரூபாயையும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய்க்கு தமிழ்நாடு அரசு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை  கண்டித்து போராட்டம் !!

MUST READ