இறுதி சடங்கில் பங்கேற்க குடும்பத்தினர் சுடுகாடு சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்து தனியாக இருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 லட்சம் பணம், 3 செல்போனை பறித்து சென்ற நபருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை கொளத்தூர் வேல்முருகன் நகர் 3 வது அவென்யூ பகுதியில் வசிப்பவர் கனகதுர்கா(27). இவர் தனது தந்தை மற்றும் கணவர், பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்..
இவரது தந்தை ரவிசங்கர் (67) நேற்று வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் உறவினர்கள் பலர் இந்த துக்க நிகழ்வில் கலந்து கொண்டனர்.. இன்று மாலை 5 மணியளவில் ரவிசங்கர் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டி குடும்பத்தினர் சுடுகாட்டில் சென்ற நிலையில் கனகதுர்கா அவரது மாமியார் மற்றும் உறவினர் பெண் ஆகிய மூன்று பெண்கள் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.. அப்போது மதுபோதையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கனக துர்கா வீட்டில் புகுந்து அங்கிருந்த பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 1 லட்சம் பணம் மற்றும் 3 செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளார்.. உடனே பாதிக்கப்பட்ட கனக துர்கா இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையனை தேடிவருகின்றனர்..
இந்த சம்பவம் கொஞ்சமும் மனசாட்சியே இல்லாத மனிதனால் நடந்திருக்கிறது.