சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் ஏழு சுற்றுகளாக நடைபெற்றது.
இரண்டாவது ஆண்டாக நடந்த இந்த தொடரில் மாஸ்டர்ஸ் பிரிவுடன் சேலஞ்சர்ஸ் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ் பிரிவில் 2700 ஃபிடே புள்ளிகளை கடந்த இந்தியா மற்றும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்களும், சேலஞ்சர்ஸ் பிரிவில் 2500 ஃபிடே புள்ளிகளை கடந்த இந்திய கிராண்ட் மாஸ்டர்களும் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தினர்.
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2-வது சீசன் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் பிரணவ் வெற்றி பெற்றார். இந்த தொடரில் 4 வெற்றி 3டிரா என மொத்தம் 5.5 புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடித்துள்ளார்.
அதை போல் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அர்ஜுன் எரிகைசி, தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோனின் உள்ளிட்ட 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் பலப்பரீட்சை நடத்தினர்.
கடைசி சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லெவோன் ஆரோன் உடன் தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் இடையே கடும் போட்டி நிலவியது . மொத்தம் 3 ஆட்டத்தில் முதல் ஆட்டத்தில் அரவிந்த வெற்றி பெற்றார்.
அரவிந்த் சிதம்பரம் ‘மாஸ்டர்ஸ்’ பிரிவிலும், பிரணவ் ‘சேலஞ்சர்ஸ்’ பிரிவிலும் வெற்றிபெற்று சாம்பியன்ஸ் பட்டம் பெற்றுள்ளனர். அரவிந்த் சிதம்பரத்திற்கு ரூ.15 லட்சமும் ,பிரணவ் விற்கு ரூ. 6 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்… தவெக தொண்டர்களுக்கு, தலைமை அறிவுறுத்தல்!