HomeBreaking Newsசென்னை புறநகர் ரயில்கள் ரத்து- மாலை 4 மணிக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில்...

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து- மாலை 4 மணிக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்

-

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து- மாலை 4 மணிக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்சென்னை புறநகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை புறநகர் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால் ரயில்கள் தொடர்ந்து இயங்குவதில் பிரச்சினை உள்ளது. அதனால் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் வழியாக செல்லக்கூடிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் மழைநீர் அதிகமாக தேங்கி நிற்பதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆவடி வழியாக திருவள்ளூர் திருத்தணி செல்லக்கூடிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பேசின் பிரிட்ஜ் வழியாக பொன்னேரி, கும்முடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை இன்டர்சிட்டி விரைவு வண்டி 

கோயமுத்தூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் இன்டர்சிட்டி விரைவு வண்டி ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாலை 4 மணிக்கு கோவை செல்லும்  என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பீச் ரயில்வே ஸ்டேஷன் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம்

இன்று 30.11.2024 ஆம் தேதி சென்னையில் அதிக மழை காரணமாக விரைவு வண்டிகள் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் மும்பை எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சில விரைவு வண்டிகள் சென்னை சென்ட்ரலில் இருந்து பீச் ரயில் நிலையம் வழியாக செல்கிறது.

 

MUST READ