நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மதராஸி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வாழ், டாக்டர், டான், குரங்கு பெடல், கொட்டுக்காளி ஆகிய படங்களை தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். இந்நிலையில் இந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தை வழங்குவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தை பார்த்தோம். அந்த படத்தின் ஒவ்வொரு அம்சங்களையும், நாங்கள் ரசித்தோம். இது தனித்துவமான கருத்துள்ள பொழுதுபோக்கு படம். புதிய படக்குழுவின் நேர்மையான முயற்சி உண்மையிலேயே தனித்து நின்றது. எனவே அதை நாங்கள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் அறிவோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் வீடியோ ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
#HouseMates – We watched it. We loved every bit of it. The unique concept, the entertainment and this new team’s sincere effort truly stood out and we knew we had to present it. @Siva_Kartikeyan @KalaiArasu_ @rajvel_hbk @Darshan_Offl @kaaliactor #ArshaBaiju @vinodhiniunoffl… pic.twitter.com/aA1ktL6T2Q
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) April 9, 2025
ஹவுஸ் மேட்ஸ் திரைப்படத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா பைஜூ, வினோதினி, தீனா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை ராஜவேல் இயக்கியுள்ளார். ப்ளே ஸ்மித் ஸ்டுடியோஸ் நிறுவனமும் சௌத் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறது. எம்.எஸ். சதீஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ராஜேஷ் முருகேசன் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.