HomeBreaking Newsநடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

-

தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார். நடிகை கஸ்தூரிக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி முன்பு இன்று நடிகை கஸ்தூரி ஆஜர்படுத்தப்பட்டார். ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை கைது செய்த போலீஸார் இன்று சென்னை அழைத்து வந்தனர்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, அர்ஜுன் சம்பத் தலைமையிலான, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், கடந்த நவ.3ம் தேதி பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்துாரி தெலுங்கு மொழி பேசுவோர் குறித்து, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவர் ‘தெலுங்கு மக்களை புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல என் பேச்சை திரும்பப் பெறுகிறேன்’ என்று மன்னிப்பு கேட்டார்.

அதனை தொடர்ந்து, சென்னை எழும்பூர் காவல்நிலையத்தில் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியிருந்தார். அதில் நீதிபதி கடுமையான கண்டனங்களை பதிவு செய்து மனுவை நிராகரித்தார்.

அதன் பேரில் எழும்பூர் காவல்நிலையத்தில் போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டை பூட்டிவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டதாக தகவல்கள் கிடைத்தது. பின்னர் ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தை வைத்து தமிழக போலீஸார் தெலங்கானாவில் முகாமிட்டு அவரை தேடி வந்த நிலையில், நேற்று இரவு கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன்  சென்னை அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார்.

நடிகை கஸ்தூரிக்கு வரும்29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்து செல்லப்பட்ட போது, ‘அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்’ என கோஷம் எழுப்பினார் கஸ்தூரி என்பது கவனிக்கதக்கது.

கங்குவா படத்திற்கு திட்டமிட்டே அவதூறு – கொந்தளித்த ஜோதிகா..!!

 

MUST READ