HomeBreaking Newsதனுஷ் - தேவி ஸ்ரீ பிரசாத் காம்போவில் 'குபேரா' முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!

தனுஷ் – தேவி ஸ்ரீ பிரசாத் காம்போவில் ‘குபேரா’ முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!

-

- Advertisement -

குபேரா படத்தின் முதல் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.தனுஷ் - தேவி ஸ்ரீ பிரசாத் காம்போவில் 'குபேரா' முதல் பாடல் ப்ரோமோ வெளியீடு!

தனுஷ் நடிப்பில் தற்போது இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதாவது தனுஷின் 51வது படமான இந்த படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இப்படம் 2025 ஜூன் மாதம் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் வருகின்ற ஏப்ரல் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தற்போது போய் வா நண்பா எனும் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் பாடியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ